ஸ்ரீ ராம ஜெயம்

அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில்

வள்ளியரச்சல்

வள்ளியரச்சல் - பூர்வீகம் பண்டைய ஆவணங்களில் (1) வள்ளி நகர் (2) வள்ளியிரச்சல் (3) வள்ளிஎறிச்சல் பொள்ளாச்சிக்கு எறிச்சல் பொழில்வாய்ச்சி என்பது பெயர். எறிச்சல் என்பது கால்நடை வளம் மிகுந்த ஊராகும். வள்ளியச்சல் என்று பதிகம், இவ்வூரைப் புகழும்

வள்ளியரச்சல் பெருமாள் கோயில் தென்புறம் உள்ள நத்தமேடு ஒரு தொல்பழங்கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அங்கு முன்பு கோட்டை கொத்தளங்கள் இருந்தன. எனவே ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோட்டை வரதராஜ பெருமாள் என சிறப்பு பெயர் பெற்றது. மேலும் அங்கு பூமியினுள் பழம் பொருள்கள் பல கிடைத்துள்ளது. வைணவ பட்டாச்சாரியார் பூஜை செய்யும் இக்கோயிலில் கணேசாழ்வார் எழுந்தருளியுள்ளார்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கொங்கு வேளாளர்களுக்கு காஞ்சிபுரம் காமாட்சியும் ஏகாம்பர நாதரும், வரதராஜ பெருமாளும் இஷ்டதேவதைகள். இந்த முறையில் காஞ்சிபுரத்தோடு தொடர்புடைய மூன்று இளைஞர்கள் போதிய படை வலிமையைச் சேர்த்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றனர்.

(1) மாந்தபுரம் பில்லகுல வீர இளைஞன்.
(2) மூலனூர் பூசகுல வீர இளைஞன்.
(3) பரஞ்சேர்வழி விழிய குல வீர இளைஞன்.
இவர்களில் தலைமை தாங்கிச் சென்றவர் பில்ல குல வீர இளைஞர்.

"தண்டிகை பவிசும் ஏகாம்பரநாதர் முன் தகுவரிசை பெருகு வந்தாய்"

அருள் பெருகு தொண்டைமான் பட்டமது செம்மலுக்கு அன்பான அன்பான மாந்தை பூபன் என்பது ஒரு பாடல் பகுதி, மாந்தை பூபன் என்பது மாந்தபுரத்தலைவரைக் குறிக்கும் சிறப்புப் பெயர். பொன் அழகு நாச்சியாருக்கு அண்ணணாகவும் மாந்தீஸ்வரருக்கு மைத்துனராகவும் மாசி மகம் அன்று ஈஸ்வரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பெருமாள் கோவில் கோட்டை பகுதியில் பூந்தை குலம், வில்லிகுலம், ஆந்தைகுலம், செல்லகுலம், வண்ணக்கன் குலம், காடை குலம், பில்ல குலம், கண்ணந்தைகுலம், திருகணக்கன் குலம் மற்றும் பல குல மக்கள் வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது.