மாந்தீசுவரருக்கு ஒரு கொடை

கொங்குப் பாண்டிய மன்னன் வீர பாண்டியனின் பதினைந்தாவது ஆட்சியாண்டில் விநாயக தேவன் என்பவன் நீண்ட நாள் உடைந்து கிடந்த 'கழுங்கந்கூவல் குளம்' என்ற குளத்தை அடைத்துத் திருத்தி அதன் கீழ் நீர் பாயும் நிலத்தைக் கொடையாக மாந்தீசுவரர்க்கு அளித்தான்.

அவன் கொடுத்த நான்கெல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அரசன் பெயரில் 'வீர பாண்டிய நல்லூர்' என்று பெயரிட்டான்.கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளது.1920 - ஆம் ஆண்டு அந்தக் கல்வெட்டை மத்தியத் தொல்லியல் துறையினர் படி எடுத்துள்ளனர். அவர்கள் மேட்டுப்பாளையம் கிராமத்தின் உட்கிடையான மாந்தபுரத்தில் மாந்திசுவரர் கோயிலுக்கு மேற்கே அக்கல்வெட்டு உள்ள கல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.இக்கோயில் மாந்தபுரீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

கல்வெட்டு வாசகம்

1.ஸ்வஸ்திஸ்ரீதிரிபுவனச் சக்கரவத்திகள்
2.கோனேரின்மை கொண்டான்
3.காங்கயநாட்டு வள்ளி
4.யறச்சல் உடையார் மாந்
5.தீஸ்வரமுடையார் கோயில் தாந
6.த்தாரான விநாயக தேவனான
7............. வீர பாண்டிய நல்லூர்க்
8.கெல்லையாவது .......ராகு வெள்ளக்க
9.ல்லுக்கு ....தெக்கு...லை சிலம்
10........வட்டவழிக்கு வ
11.டக்கு கிழக்கு எல்லையாவது வா.......
12.பாதைக்கு......முற்றுக்கு மேற்கு ஒர
13.ழக்கு வடக்கு எல்லையாவது
14.பிடையுண்ண பாழிக்மு நாந்கெ
15.ல்லையும் குளம் நெடுநாள்
16.பாழ்பட்டுக் கிடந்த கழு
17.ங்கந் கூவ்க்குளம் பதிநா
18.லாவதுக் கெதிராமாண்டும்