வள்ளியறச்சல் காணியாளர்கள்
கொங்கு வேளாளர் ச்முதாய வரலாற்றில் மிகவும் முக்கியமான இடம் வகிப்பது குலங்களேயாகும்.குலங்களைச் கூட்டம் என்றும் கோத்திரம் என்றும் அழைப்பர்.மூன்றும் ஒரே பொருள் தருவன.குலக்காணி, குலதெய்வம் ,குலகுரு,குலப்புலவர் எனக் குலத்தின் அடையாளத்தோடு அழைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.பல சமூக அடையாளம் மறைந்தாலும் மறையாமலிருப்பது குலம் மட்டுமேயாகும்.

ஒவ்வொரு குலத்திற்கும் எந்தெந்த ஊர்கள் காணியூர்கள் என்று வகுக்கப்பட்டன.சமூகப் பட்டயங்கள் "நற்குடி நாற்பத் தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் குல கோத்திரங்கள் பிரிந்து 24 நாட்டார் என்றும் ஊறுக்கெல்லாம் குல தெய்வங்களும் காணி பூமிகளும் பிரித்து" என்று கூறுகின்றன.

ஒரு குலதிற்குச் சொந்தமான உரிமையுடைய ஊர் "காணியூர்" எனப்படும்.காணி என்ற சொல்லுக்கு ஆட்சிஉரிமை அனுபவிக்கும் உரிமை என்பது பொருள்.ஒரு ஊரின் எல்லா விதமான உரிமைகளையும் அனுபவிக்கும் உரிமையுடையவர்கள் காணியாளர் அல்லது காணியாளக் கவுண்டர்கள் எனப்படுவர்.

காணியாளர்கள் ஊர் நிர்வாகத்தில் பங்கு பெறுவர்.வரி வசூல் செய்து அரசுக்குச் செலுத்தும் பணியிலும் பங்கு பெறுவர்.கோயில்களில் உரிய மரியாதை பெறுவதோடு ஊள்லூர்க் குடிமடைகளை ஏவல் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்.

இதனை முகுந்த நல்லூர்ப் பட்டயம்
"ஆண்ட சொர்னாதாயம் ந்ஞ்சை புஞ்சை ப்ட்டி தொட்டி
மாவடை மரவடை அணை அச்சுக்கட்டு மக்கய மகமை சுங்கம்
சோதினை எல்லை கொல்லை இதுவெல்லாம் செல்லும் சதுர்
பூமியை மரியாதைக்குள்ள விபூதி பிரசாதம் பாக்கு வெத்திலை பச்சவடம்
இதுவெல்லாம் உரிமையுடையதாகக் காணிகொடுத்தோம்"
என்று கூறுகிறது

...

வள்ளியறச்சல் காணியாளர்களின் சிவமலைத் திருப்பணிகள்,
சிவமலை-காங்கய நாட்டின் பொதுத் தலம்.சிவமலைத் தேர்த்திருவிழாவில் காங்கய நாட்டு 14 ஊர்க்காரர்கள்பரிவட்டம் கட்டிச் சிறப்பிக்கப் பெறுவர்.வள்ளியறச்சல்காரர்களும் அச்சிறப்புமிகு விழாவில் இடம் பெறுவர்.மடவளாகம் லட்சுமண பாரதி அவர்கள் பாடியுள்ள சிவமலைக் குறவஞ்சியில் வள்ளியறச்சல் குளம்,ஏரி குறிக்கப்படுவதுடன்,வள்ளியறச்சல்

பில்ல குல நல்லண கவுண்டர்
கருமண கவுண்டர்
வில்லி குல நாட்டக்கவுண்டர்
ஆந்தை குல சிவன்மலைக் கவுண்டர்
ஆகியோர் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்ச் 18-ஆம் நூற்றண்டின் இறுதியில் வாழ்ந்தவர்கள்.இவர்களில் வில்லி குல நாட்டக்கவுண்டர்பொன் அழகு நாச்சியம்மன் கோயில் திருப்பணியில் பங்கு பெற்றவர்களில் ஒருவர் என்பது தீபத் தம்ப மண்டபக் கல்வெட்டால் தெரிகிறது.சிவமலை என்பதெ பண்டைய வழக்கமாகும்.

'மரங்கொத்திப் பச்சியும் நாகண வாச்சியும்
வலியானும் சிட்டுடன் மாடப் புறாக்களும்
பொருந்திய வள்ளி நகர்க்குளத்து ஏரிப்
புறவாய்ப் பழனத் திருத்தில் வில்லிகுலத்
துரந்தர நாட்டா ம்கிபன் பண்ணைபற்றிச்
சொல்லும் ஆந்தைகுலச் சிவமலை வயலிலும்
திருந்தும் பில்லகுல நல்லண்ன் கருமணன்
செங்கரும்பின் தோட்டச் செய்யினிலே
என்பது சிவமலைக் குறவஞ்சிப் பாடலாகும்.